பொதுகே
என அழைக்கப்பட்ட புதுவை
பண்டைய வரலாற்று பெருமை மிக்க
நகரம் மட்டுமின்றி தமிழ்ச் சான்றோர்களும் ஆன்றோர்களும் வாழ்ந்த
பூமி. இந்த பூமியில் எதிர்வரும் 19-21 செப்டம்பர் 2014 ஆகிய மூன்று
நாட்கள் நடைபெற
உள்ள 13வது உலகத்
தமிழ் இணைய
மாநாட்டிற்கு எம்
புதுவை மக்கள்
சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித
நாகரிகம் என்பது
மனிதன் முதன்
முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தபோது வளர்ச்சி அடையத் தொடங்கியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. நாகரிகம் வளர்ச்சி அடைய பன்னெடுங்காலம் தேவைப்பட்டது. எங்கெங்கு மக்கள் குழுவாக
இருந்தனரோ அங்கெல்லாம் மொழியும் நாகரிகமும் வளர்ச்சியடைந்தது. குழுக்களுக்கிடையே நடைபெற்ற சண்டைகளால் சில நாகரிங்களும், அவைகளின் மொழிகளும் வீழ்ச்சி அடைந்தன.
ஆனாலும் எச்
சூழலிலும் தன்னைத்
தகவமைத்துக் கொண்டு
வாழ்ந்த நாகரிகம் தமிழனின் நாகரிகம்.
தமிழின்
மொழி வளர்ச்சி எல்லைக்
கடந்து விரிந்து செல்வதற்கு தமிழ்
மன்னர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
படையெடுப்பும் வணிகமும் அதனைச் செம்மைச் செய்தன. கால
ஓட்டத்தில், பல்வேறுபட்டவர்கள் பல்வேறு காரணங்களால் உட்புகுந்ததின் விளைவு,
தமிழனின் எல்லைச்
சுருங்கிற்று. ஆனால்
தமிழ்மொழியின் சொற்கள்
ஆங்காங்கே தம்மை
வேர்படுத்திக்கொண்டு வேற்று
மொழிச்சொற்களாயின
.
மீண்டும் நாகரிக வளர்ச்சிக்கு வருவோம். நாகரிகம் என்பது தொன்றுதொட்டு வரும் பழக்க
வழக்கங்களை அடியொற்றி தம்மைச் செம்மைப் படுத்திக் கொள்வதாகும். அதாவது, அனைத்து
வகைகளிலும் வளர்ச்சி அடைவதாகும். அதில்
முக்கியமானது, தொழில்
நுட்ப வளர்ச்சி. வண்டிச் சக்கரம்தான் தொழில் நுட்ப
வளர்ச்சியின் தொடக்கக் கோடு என்று
சொன்னாலும், தொழில்
நுட்பமானது தன்னை
மேம்படுத்திக் கொள்ள
எடுத்துக் கொண்ட
காலம் என்பது
மிகவும் நீண்டது.
அது சில ஆயிரம்
ஆண்டுகளின் கணக்கில் வருவது.
ஆனால்
சில ஆயிரம் ஆண்டுகளின் வளர்ச்சியைச் சட்டென்று புறம் தள்ளி,
உயர்வு நவிற்சியில் சொல்லப் போனால்,
கண்மூடித் திறப்பதற்குள் மிக பிரமாண்டமாய் வளர்ச்சி அடைந்த
தொழில் நுட்பம்,
கணினித் தொழில்
நுட்பம்.
கணினித்
தொழில் நுட்பம்
பயன்பாட்டிற்கு வந்த
ஆரம்பக் காலங்களில் எழுந்த மிகப்பெரிய எதிர்மறைக் கருத்து,
“கணினிப் பயன்பாட்டில் தமிழைப் பயன்படுத்த முடியாது” என்பதுதான். எதிர்மறையாளர்கள் முன்வைத்த வாதம் –
தமிழின் வரிவடிவம் சிக்கலானது, அது
கணினி மொழிக்கு ஒவ்வாது
தமிழில் எழுத்துக்கள் அதிகம் – அதாவது
247 எழுத்துக்கள். ஆனால்
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்தான்.
தமிழன்
உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தவன். மேற்சொன்ன கருத்தைப் புறம்
தள்ளி, முயற்சியில் இறங்கினான் தமிழன்.
முயற்சி.. முயற்சி
.. வெற்றி. எம்
கணினிப் பொறியாளர்களின் முயற்சி வெற்றியில் முடிந்தது. தமிழ்
வரிவடிவம் கணினிக்குரிய ஒருங்குறி (யுனிகோட்) மொழியில் வடிவமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டில் உள்ளது.
அதன்
விளைவு, உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்
பெருமக்கள் தமிழால்
ஒன்றினையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அதில்
பெரும்பங்கு வகிப்பது ‘இணையம்” எனும்
மின்வலைப்பின்னல்.
எங்கோ
ஒரு மூலையில் தமிழன்
எனும் தகுதியுடன் மட்டும் வாழும்
எவரும் தமிழ்
அறிஞர் பெருமக்களுடன் தொடர்பில் வாழ
முடிகிறது. எல்லோருக்கும் கருத்துக்கள் தோன்றும். ஆனால் அவற்றை
எல்லோரிடமும் பகிர்துகொள்வது என்பது எளிதல்ல.
அதனை எளிமைப் படுத்தியது இணையத் தமிழ்.
உலகின்
எங்கோ ஒரு
மூலையில் இருக்கும் ஒரு தமிழன்,
இங்கு புதுவையில் நடைபெறும் 13வது
உலகத் தமிழ்
இணைய மாநாட்டில் பங்குகொள்ள முடிகிறது என்றால்,
அது இணையத்தமிழால் மட்டுமே
முடிகிறது.
அதனால்தான் ஒரு எளிய
தமிழனான எனக்கும் 13வது உலகத்
தமிழ் இணைய
மாநாட்டின் பொருட்டு வலைப்பூ பதிவிட
வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் வலைப்பூ
தொடங்கியபோது தெரிவித்ததுபோல், நான் நல்ல
தமிழில் எழுதுகிறேனா என்று தெரியவில்லை, ஆனால் என்
தாய்மொழியில் எழுதுகிறேன் என்கின்ற பெருமை
எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பளித்த உலகத் தமிழ்
இணைய மாநாட்டின் பொருப்பாளர்களுக்கு மீண்டும் நன்றி.
பொது விசைப்பலகை
ஆனாலும்,
வழக்கம்போல் என்
மனதில் தோன்றும் கருத்தைப் பதிவிடுகிறேன். இதை தமிழ்க்கணினி வல்லுனர்களுக்கும் வலைக்கணினி வல்லுனர்களுக்கும் விண்ணப்பமாக முன் வைக்கிறேன். தமிழ் ஆர்வலர்கள் இதனை வழிமொழிந்தால் மிக்க மகிழ்வேன்.
நான்
தொடக்க காலத்தில் தமிழைக் கணினியில் பயன்படுத்த தொடங்கியபோது, பல்வேறு தமிழ்
மென்பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால்
ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக பயன்பாட்டில் இருந்தன.
சில, தமிழ் தட்டச்சு பொறியின் வரிசை
அடுக்கில் இருந்தன.
வேறு சில, எழுத்துக்கள் இடமாறி வேறுவிதமாக இருந்தன. தமிழ்
தட்டச்சு பொறியில் பழக்கமில்லாதவர்கள் பயன்படுத்திட ஒலிக்குறிப்பில் தட்டச்சு செய்யும் மென்பொருட்களும் இருந்தன. எனக்கு
தமிழ் தட்டச்சு பொறியில் பயிற்சி
இல்லாததால், ஒலிக்குறிப்பு வடிவில் தட்டச்சு செய்யும் மென்பொருளை விலைக்கொடுத்து வாங்கி பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், அவ்வாறு
நான் தட்டச்சு செய்து
அனுப்பும் கடிதங்கள், ஆவனங்கள் பிறர்
படிக்க இயலாமல்
தொந்தரவு செய்தன.
அதன் பொருட்டு அந்த
மென்பொருளில் பயன்படுத்தபடும் எழுத்து வடிவையும் (பாண்ட்) சேர்த்து அனுப்பத் தொடங்கினேன். ஆனாலும் அதற்குரிய மென்பொருள் கணினி
பயன்படுத்தும் மற்றவர்களிடம் இல்லை எனும்
சூழ்நிலையில் அதுவும்
இடைஞ்சலாகவே இருந்தது. எனது நண்பர்
தெரிவித்த தகவலின்படி, ஒருங்குறியில் தமிழ்
எழுதினால் எங்கும்
அனுப்பலாம், படிக்கலாம் என்பது அறிந்து
கொண்டேன்.
அப்போது கணினி
வழியில் தமிழினைத் தட்டச்சு செய்ய
எனக்குக் கிடைத்த
இலவச மென்பொருள் அழகி.
அதன் பெயர் போலவே
அதன் பயன்பாடும் அழகாகவே
என் பயன்பாட்டிற்கு ஒத்துழைத்தது. இப்போது நான்
தட்டச்சு செய்வதும் அழகியே. இந்த
அழகி ஒரு ஒருங்குறி மென்பொருள். இதனை
வடிவமைத்தவர் திருமிகு. பி. விஸ்வநாதன் அவர்கள்.
அழகி
மென்பொருள் செய்தது
பற்றி அவரது
வார்த்தைகளில் -
[ஒரு கொடிய
வியாதியைத் தந்து,
அதையே ஒரு
தூண்டுகோலாக / பாலமாக
/ வரமாக ('அழகி'
தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த
இறைவனுக்கு நன்றி.
இல்லையென்றால், 'Also went
to USA. Also settled in USA' என்றே என்
வாழ்க்கை அமைந்திருக்கும். ஒரு மென்பொருள் சிற்பியாக இன்று
பரிணமித்து, நானே
தனிமனிதனாய்க் கண்டுபிடித்து உருவாக்கிய ஒன்று
மற்றவருக்கு மிகுந்த
பயனை அளிக்கும்பொழுது, அதற்காக
அவர் நம்மை மனமாரப்
பாராட்டி உள்ளத்து பேரன்பைத் தெரிவிக்கும்பொழுது ஏற்படும் 'ஓர்
உணர்வு' (a special feeling), அது
படைப்பாளிகளுக்கு மட்டுமே
தெரியும். வார்த்தைகளால் என்றுமே விவாதிக்க முடியாது. எப்படி
ஞானிகளால் தங்கள்
நிலையை முழுமையாக எடுத்துச் சொல்ல
முடியாதோ, அது
போல.] [ http://azhagi.com/viewstam.html
]
நான்
என்றென்றும் “அழகி”க்கும்
அதனை வடிவமைத்த “திரு.
பி. விஸ்வநாதன்” அவர்களுக்கும் நன்றியுடன் கடமைப்பட்டவன்.
சரி
மீண்டும் பதிவிற்கு வருகிறேன். தமிழ் இப்போது ஒருங்குறியில் கணினி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மின்னஞ்சல்கள் தமிழில் எளிதாக அனுப்ப முடிகிறது. வரிவடிவச் (பாண்ட்) சிக்கல்கள் இப்போது இல்லை.
ஆனால், இப்போதுள்ள மிகப்பெரிய சிக்கல், தமிழ் விசைப்பலகை அமைப்பு முறை. நான் பயன்படுத்துவது ஒலிக்குறிப்பு முறையில். அதாவது ஆங்கில எழுத்துக்களை ஒலி வடிவில் amma என்று தட்டச்சு செய்தால், அது அம்மா என பதிவாகும். வேறு சிலர், தமிழ் தட்டச்சு பொறி அமைப்பு முறையான யளனகப வரிசை முறையைப் பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் வேறு விசைப்பலகை வடிவைப் பயன்படுத்துகின்றனர். தற்போது வழக்கத்திலுள்ள பல்வேறு விசைப்பலகைகளைப் பார்க்கவும்.
ஆங்கிலத்தில் விசைப்பலகை (KEY BOARD)
என்பது உலகெங்கும் ஒரே அமைப்பில்தான் உள்ளது. தொடக்ககாலத்தில் ஆங்கிலத்தட்டச்சில் விசைகள் ஆங்கில அகரவரிசைப்படி அதாவது, ஏபிசிடி எனும் வரிசையில் இருந்தன. பின்னர் விசைகளின் பயன்பாட்டின் அளவினைக் கருத்தில்கொண்டு, அவை இடமாற்றி தற்போது உள்ள வரிசையில் அமைக்கப்பட்டன.
நான் கேட்பதெல்லாம், உலகம் முழுமைக்கும் தமிழுக்கு ஏன் ஒரே விசைப்பலகை (KEY BOARD) அமைக்கக் கூடாது? அவ்வாறு அனைவரும் ஏற்கும் வகையில் கணினி வல்லுனர்கள் விசைப்பலகை வடிவமைத்தால், அது மென் பொருளில் மட்டுமின்றி, வன்பொருளிலும் பயன்பாட்டிற்கு வரும். அப்படி வரும்போது, ஆங்கில விசைப்பலகையைப் பயன்படுத்தி ஒலிக்குறிப்பில் தமிழில் தட்டச்சு செய்யும் சுமை நீங்கும். மாறாக, ஆங்கில சொற்களுக்கு, தமிழில் ஒலிக்குறிப்புக்கு ஏற்ப தட்டச்சு செய்யும் மாற்று நிலை ஏற்படும். அதாவது, தமிழில் மதர் என்று தட்டச்சு செய்தால் ஆங்கிலத்தில் mother என்று வரும் நிலை ஏற்படும்.
பொதுவாக நம்முன் வைக்கப்படும் கேள்வி என்னவென்றால், தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அவற்றை எப்படி 26 எழுத்திற்கு மட்டுமே இடமுள்ள விசைப்பலகையில் அடுக்குவது என்பதுதான். இதற்கு கணினி வல்லுனர்கள்தான் தங்களது பங்களிப்பை நல்க வேண்டும்.
ஆனாலும், நான் இங்கு ஒரு மாதிரி அட்டவணைக் கொடுத்துள்ளேன். ஒரு விசைக்கு ஒரு எழுத்து எனும் வீதத்தில் கொடுத்துள்ளேன், (மேல்-குறில் கீழ்-நெடில்).
1
|
க
|
10
|
ம
|
19
|
அ
|
2
|
ங
|
11
|
ய
|
20
|
இ
|
3
|
ச
|
12
|
ர
|
21
|
உ
|
4
|
ஞ
|
13
|
ல
|
22
|
எ
|
5
|
ட
|
14
|
வ
|
23
|
ஒ
|
6
|
ண
|
15
|
ழ
|
24
|
ஐ, ஔ
|
7
|
த
|
16
|
ள
|
25
|
ஃ
|
8
|
ந
|
17
|
ற
|
26
|
|
9
|
ப
|
18
|
ன
|
மேலே உள்ள அட்டவணைப்படி, விசைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நமது தமிழில் மொழிமுதலில் மெய்யெழுத்து வாராது. அதனால் இயல்பின் பொருட்டு உயிர்மெய் எழுத்துக்களின் அகர வரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் விசையை பயன்படுத்தினால், க அச்சாகும். முதல் விசையை கீழ் அழுத்தத்துடன் (shift) பயன்படுத்தினால் கா அச்சாகும். அதே சமயம் கி என அச்சிட 1+20 (க+இ) பயன்படுத்தினால் கி அச்சாகும். கீ என அச்சிட 1+20 (க+ஈ) – (ஈ-கீழ் அழுத்தம்) செய்யவேண்டும். அதாவது, குறில்கள் இயல்பாகவும், நெடில்கள், கீழ் அழுத்தத்துடனும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். இதில் 25-வதில் ஓரிடமும் 26-வது விசையும் பயனின்றி இருப்பதால், அதில் வட எழுத்துக்களான, ஜ, ஷ, ஹ, ஸ போன்றவற்றை, shift, அல்லது funkey உபயோகப்படுத்தி அச்சிடுமாறு அமைக்க வேண்டும்.
கவிதை என அச்சிட – க+வ+இ+த+ஐ என தட்டச்சு செய்யவேண்டும். இங்கு க என அச்சிட க மட்டுமே போதும். க+அ தேவையில்லை. அதுபோல் கா என அச்சிட க+ஆ தேவையில்லை. க -வை கீழ் அழுத்தத்துடன் அச்சிட கா எனக் கிடைக்கும். இதனால் அகர உயிர்மெய்க்கு அ, ஆ பயன்பாடு குறையும்.
பக்கம் என அச்சிட – ப+க+க+ம என தட்டச்சு செய்ய வேண்டும். இங்கு இரண்டாம் எழுத்தான க என தட்டச்சு செய்யும்போது, அது மெய்யெழுத்தாக அச்சிடுமாறு கணினி செயல் மொழி (programme)
எழுதப்பட வேண்டும்.
சொல்லின் இடையில் இரண்டு க, அதாவது க+க வரும்போது, அது இயல்பாகவே முதலில் வருவது மெய்யெழுத்தாகவும், பிரிதொன்று உயிர்மெய்யாகவும் அச்சிடுமாறு அமைக்க வேண்டும். சொல்லின் இறுதியில் பொதுவாக
மெய்யெழுத்து வருமாறு அமைக்கப்பட வேண்டும். சொல்லின் இறுதியில் எங்கேனும் அகர உயிர்மெய் வரவேண்டி இருப்பின் அங்கு +அ அச்சிட, அகர உயிர்மெய் கிடைக்கும். மயிலாட என்பது ம+ய+இ+லா+ட்(+அ) என அச்சடிக்க கிடைக்கும்.
அழகி மென்பொருளில், எழுத்துத் திருத்தம் இயல்பாகவே நடைபெறும் வகையில் செயல்மொழி (programme)
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வண்டி என்பதைத் தட்டச்சு செய்யும்போது, தவறுதலாக டண்ணகரத்திற்கு பதிலாக றன்னகரம் பதிவானல், அது தாமாகவே, டண்ணகரமாக மாற்றிக்கொள்ளும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, தமிழ் அறிஞர் பெருமக்கள் உதவியோடு, செயல்மொழி வடிவமைக்கப்பட வேண்டும்.
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை என்பது ஒரு எடுத்துக்காட்டு விளக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. எந்த எழுத்துக்கள் விசைப்பலகையில் (Letters on KEY BOARD) எங்கு அமைக்கப்பட வேண்டும் என கணினி வல்லுனர்களுடன் தமிழ் அறிஞர்கள் அமர்ந்து எழுத்துக்களின் அதிகம்-குறைவு பயன்பட்டினைக் கருத்தில் கொண்டு தெரிவு செய்ய வேண்டும்.
இந்த வடிவமைப்பு என்பது, உலகமுழுதும் வன்பொருள் விசைப்பலகையில் (Hardware -
KEY BOARD) ஒரே தமிழ் விசைப்பலகை (Universal
KEY BOARD) அமைக்க ஏதுவாக இருக்க வேண்டும்.
நான் இங்கு குறிப்பிட்டிருப்பது வரைவு முன்மொழிவே. இதனைச் செம்மையுற அமைப்பது கணினி வல்லுனர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆகியோரின் கைகளில் உள்ள மிகப் பெரிய பொறுப்பாகும்.
இணையத்தால் தமிழும் தமிழரும் இணைந்து தமிழ் வளர்க்கும் காலமிது. ஆனால் இன்னமும் எத்தனைக் காலம்தான் நாம் ஆங்கில விசைப்பலகையை தமிழ் தட்டச்சுக்கு கணினியில் பயன்படுத்திக் கொண்டிருப்பது. முற்றிலும் தமிழிலான விசைப்பலகையை (KEY BOARD)
உலகமெங்கும் ஒரே வடிவில் (Universal
Design) வடிவமைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
கணினி வல்லுனர்களும், செயல்மொழி உருவாக்கும் வல்லுனர்களும், தமிழ் அறிஞர் பெருமக்களும் ஒரு குழுவாக அமர்ந்து ஆய்ந்து, கணினிக்குரிய தமிழ் விசைப்பலகையினை உலகம் முழுமைக்கும் ஒரே விசைப்பலகையாக (UNIVERSAL
TAMAIL KEY BOARD) வடிவமைத்து எம்போன்ற மக்களுக்கு வழங்க வேண்டும்.
பழகிய நமக்கு புதிய விசைப்பலகை அமைப்பு சற்று சிரமமாக இருப்பினும், பின்வரும் காலங்களில் அது அனைவருக்கும் இயல்பானதாகிவிடும்.
13வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இக்கருத்து முன்வைக்கப்பட வேண்டும் என்று தமிழ்க் கணினி பயன்பாட்டாளர்களின் சார்பாக இந்த எளியோன் முன் வைக்கிறேன்.
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்புடன் வெற்றியடைய, உத்தமம் அமைப்பிற்கு எம் தமிழ் மக்களின் சார்பாக மீண்டும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து .. முயன்றால் கவிதை
… முயற்சிக்கிறேன்.
அருமையான கட்டுரை... வாழ்த்துக்கள்... உங்கள் கருத்துக்கள் ஏற்கப்படட்டும்.. தமிழ் ஏற்றம் பெறட்டும்...
ReplyDelete13வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் "தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு" எனும் முதன்மைக் கருத்தினைச் செம்மைச் செய்திட, கணினியில் தமிழ்ப் பொதுவிசைப் பலகையும் கொண்டுவர வேண்டும் என்பதே என் விழைவு. இக் கருத்திற்கு ஆதரவு நல்கிய திருமிகு. புதுவை வெ. செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி.
Delete