அகரத்தை முதலாக்கி வாழ்வியலை உரைத்த வள்ளுவர் பெருந்தகையை வணங்கித் தொடங்குகின்றேன்.
வலைப் பூக்கள் இப்பொழுது பகிர்தலுக்குப் பாலம் அமைக்கும் பணியினைச் செவ்வனே செய்து வருகின்றன. அதிலும் தமிழில் வலைப்பூக்கள் பெருகிவருதல் மகிழ்வுக்குரிய நிகழ்வாக உள்ளது. இச்சூழலில், புதுச்சேரியில் நடைபெறவுள்ள 13வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பொருட்டு வலைப்பூ தொடங்குதல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது மேலும் மகிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் தமிழன் என்பதும், தமிழ் வழிக் கல்வியில் பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவன் என்பதைத் தவிர வேறு பாண்டியத்துவம் எதுவும் தமிழில் எனக்குக் கிடையாது. தமிழ் அறிஞர்கள் மட்டுமே தமிழைப் பற்றியும் தமிழ் அறிதல் பற்றியும் பேச வேண்டும் என்பதில் உடன்பாடு அற்றவன். என் தமிழை நான் பேச எனக்கு உரிமை உண்டு. பாமரத்தமிழனைத் தமிழ் பேச, எழுத, படைக்க அனுமதித்தால்தான் தமிழ் வளரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
“அகழ்வு”, இது இந்த வலைப்பூவின் முகவரி. "அகழ்தல்" என்பதற்கு “உழுதல்”, “தோண்டல்” என நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி பொருளுரைக்கிறது.
தமிழின் புதைப் பொருட்களைத் தோண்ட வேண்டும், நல் கருத்துக்களை உழுதல் வேண்டும் என்பதால்
இதற்கு அகழ்வு எனப் பெயரிட்டேன்.
“என் தமிழும் உன் தமிழும் நம் தமிழும் நன்னியவை”
கொட்டிக் கிடக்கின்றன. ஆனல் சிப்பிகளைப் பொறுக்கிக் கொண்டு சிறு விளையாட்டு விளையாடிக்
கொண்டிருக்கிறோம். முத்துக்களைக் கொடுத்துச் சென்ற முன்னோர்கள் ஏராளம். இருப்போர்கள்
வெகு சிலர். நாமும் முத்துக்களைச் சேகரிக்க வேண்டும் அல்லது முயலவேண்டும். அதற்குத்
தமிழ் அறிஞர் பெருமக்கள் என் போன்ற பாமரர்களையும் வழித்துணைக்காகவாவது கைக்கூட்டி அழைத்துச்
செல்லவேண்டும்.
தமிழ் வளர்த்த பெரியோர்கள் என சிலரது முகங்களை
மட்டுமே இங்கு படமிட்டுள்ளேன். கிடைத்த முகங்களைப் படமிட்டுள்ளேன். கிடைக்காத முகங்களைக்
கைகூப்பித் தொழுகின்றேன். இதில் காமராசரை மையமிட்டுள்ளேன். எழுத்தறிவித்தவன் இறைவன்
ஆகும். எல்லோர்க்கும் கல்வி வேண்டும் என்பதில் தின்னமாக இருந்து செயல்படுத்திக் காட்டிய
செம்மல் என்பதாலும், எழுத்தறிவில்லாத ஒருவன் ஏழைகளுக்கு எழுத்தறிவித்ததாலும் அவரை முதன்மைப்
படுத்தியுள்ளேன்.
இந்த வலைப்பூ போட்டியிடுதலுக்காக தொடங்கப்பட்டாலும்,
இதனைத் தொடர்ந்து பதிவிட உள்ளேன். அகழ்வு எனும்
தலைப்பிற்கு அனுமதியளித்த 13வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் அமைப்பாளர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அடுத்து…. சுழன்றும் ………..
No comments:
Post a Comment